Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd February 2022 19:57:36 Hours

8 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் செம்புவத்த காட்டு காட்டுத் தீயினை அணைப்பு

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 611 வது பிரிகேடின் 8 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் செவ்வாய்க்கிழமை (1) பிற்பகல் யட்டியந்தோட்டை செம்புவத்த காட்டுப் பகுதியில் வறண்ட வானிலை காரணமாக ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

611 வது பிரிகேட் தளபதி வழங்கிய வழிகாட்டுதலின் பேரில் 8 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி தனது படையினருடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டு காட்டுத் தீயின் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தினர்.