Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd February 2022 18:00:25 Hours

இந்தோனேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இராணுவத் தளபதிக்கு இடையிலான இராஜதந்திர ரீதியிலான சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதுடில்லியின் இந்தோனேசிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கொமடோர் டிடிக் குர்னிஅவன், பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்தில் இன்று பிற்பகல் (2) திகதி நேரில் சந்தித்தார்.

1952 ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் நட்பு ரீதியான இராஜதந்திர உறவுகள் மற்றும் சமய மற்றும் கலாசார ஒற்றுமைகள் ஆகியன தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துறையாடப்பட்டன.

இராஜதந்திரி கொமடோர் டிடிக் குர்னிஅவன் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் இருதரப்பு விவகாரங்கள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொண்டார், மேலும் இராஜதந்திரி கொவிட் 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் இராணுவத் படையினர்களால் மேற்கொள்ளப்படும் பணிகள் பற்றியும் கேட்டறிந்துகொண்டார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் மனிதாபிமான நடவடிக்கைகளின் உச்சக்கட்டத்தின் போது பயங்கரவாத அமைப்புகளை அகற்றுதல் போன்றவற்றின் மூலம் இலங்கை இராணுவ படைகளுக்கு இந்தோனேசியா வழங்கிய தொடர்ச்சியான நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பு போன்ற ஆதரவிற்காக ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்தோனேசியாவிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.