Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd February 2022 19:24:24 Hours

நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தலைமையகத்தில் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கை நைஜீரிய உயர்ஸ்தானி காரியாலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் அந்தோனி விக்டர் குஜோஹ் இன்று பிற்பகல் (2) திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சந்தித்தார்.

இராணுவத் தளபதி அலுவலகத்தில் நடந்த உரையாடல்களின் போது, இருவரும் சக்தி மற்றும் எரிசக்தி, கடல்சார் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்கள், தொழில்நுட்ப மற்றும் கலாசார ஒப்பந்தங்கள் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர், மேலும் அவற்றில் சில வெவ்வேறு மட்ட பேச்சுவார்த்தைகளில் உள்ளன. கொமடோர் குஜோ, இலங்கையில் தொற்றுநோயைத் தொடர்ந்து கட்டுப்படுத்துவதில் இலங்கை இராணுவ படையினர்களின் அர்ப்பணிப்புப் பணிகள் மற்றும் தேசத்தின் அபிவிருத்திக்காக தொழில் ரீதியாகத் தகுதி வாய்ந்த இலங்கைப் பாதுகாப்பு படையினர் எவ்வாறு தமது பணிகளைத் தொடர்ந்து செய்கிறார்கள் என்பது பற்றியும் கலந்துரையபடப்பட்டது.

நினைவுச் சின்னங்கள் பரிமாற்றத்துடன் இந்த நட்பு ரீதியான சந்திப்பு நிறைவு பெற்றது.