Header

Sri Lanka Army

Defender of the Nation

04th February 2022 00:07:55 Hours

துருக்கியின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதரகத்திலுள்ள இராணுவ ஆலோசகர் கேணல் கென் கொக்காயா பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை புதன்கிழமை (2) திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற சுமுகமான சந்திப்பின் போது, இருதரப்பின் முக்கியத்துவம், பாதுகாப்பு நலன்கள், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வர்த்தகம் மற்றும் வர்த்தக உறவுகள் , பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

நாட்டில் கொவிட் - 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை இராணுவ படையினர் ஆற்றிய பங்களிப்பையும், தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்காக ஆற்றி வரும் பணிகளையும் வருகை தந்த தூதுவர் பாராட்டினார்.

இச்சந்திப்பு நினைவுச் சின்னங்கள் பரிமாறியதுடன் சந்திப்பு நிறைவடைந்தது.