Header

Sri Lanka Army

Defender of the Nation

31st January 2022 21:17:18 Hours

இராணுவ முன்னோக்கு வியுகத் திட்டத்திற்கு அமைவாக கஜபா படையணி மையத்தினால் இராணுவ போர் வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மூன்று புதிய வீடுகள் வழங்கல்

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கஜபா படையணியின் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் இராணுவ முன்னோக்கு வியுக கொள்கைத்திட்டம் 2020-2025" க்கு அமைவாக. உடல் ஊனமுற்ற போர்வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக சாலியபுர பகுதியில் உள்ள கஜபா படையணியினால் மூன்று புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இப் பணிக்கான இணை அனுசரனையானது படைவீரர் விவகார பணிப்பகம் மற்றும் கஜபா படையணி தலைமையகம் ஆகியவற்றினால் வழங்கப்பட்டது. 53 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ, 112 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக பல்லேகும்புர மற்றும் 111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க ஆகியோரால் ஜனவரி 25 முதல் 27 ஆகிய தினங்களில் மூன்று வீடுகளும் தனித்தனியாக பயணாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் மற்றும் கஜபா படையணியின் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின்படி ஹிக்கடுவை கோனாபினுவல, தெனியாய கொட்டபொல, ரெடீகம தலுக்கொல்ல ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று புதிய வீடுகள் சுப நேரத்தில் மத சடங்குகளுக்கு அமைவாக மூன்று நாட்களில் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த போர்வீரரான 15 வது (தொ) கஜபா படையணியை சேர்ந்த சார்ஜென்ட் கே.பி.எஸ் பத்மசிறி அவர்களின் குடும்பத்திற்காக கோனாபினுவலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு செவ்வாய்கிழமை (25) அவரது குடும்ப உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிர்மாணிப்பு பணியினை கஜபா படையணி நிலைய தளபதி கேணல் ஷிரந்த மில்லகல அவர்களின் மேற்பார்வையில் 15 வது (தொ) கஜபா படையணி மற்றும் கஜபா படையணி நிலைய படையினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இவ் வீட்டினை குடும்ப உறுப்பினர்களிடம் பிரதம அதீதியாக கலந்து கொண்ட 53 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ கையளித்தார். இதன்போது, பயனாளிகளுக்கு வீட்டுத் தேவையாக நான்கு நாற்காலிகள், ஒரு எரிவாயு அடுப்பு மற்றும் சிற்றூண்டி மேசை என்பனவற்றுடன் சாப்பாட்டு மேசையும் பரிசாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கஜபா படையணி மையத்தின் நிலையத் தளபதி கேணல் ஷிராந்த மில்லகல, 15 வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பி.பிரசன்னா உட்பட பலர் கலந்துகொண்டனர். 2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் போது உடல் ஊனமுற்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான 14 வது கஜபா படையணியின் சிப்பாய்க்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு வியாழக்கிழமை (26) கொட்டபொலவில் திறிந்து வைக்கப்பட்டது.

14 வது கஜபா படையணி மற்றும் கஜபா படையணி மையம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக 112 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக பல்லேகும்புர அவர்கள் கலந்து கொண்டார். இதேவேளை, பயனாளியின் வீட்டுப்பாவனைக்கு தேவையான ஆறு நாற்காலிகளுடன் கூடிய சாப்பாட்டு மேசை, சோபா சொகுசு நாற்காலிகள் மற்றும் சிற்றூண்டி மேசை என்பன பரிசாக வழங்கப்பட்டன. 14 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் தமித் மிரிஹெல்ல, கஜபா படையணி நிலையத்தின் பதவி நிலை அதிகாரி- 1 (படைவீரர் விவகாரங்கள்) ஆகியோர் வீடு கையளிக்கும் நிகழ்வில் பங்குபற்றினர்.2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் போது உடல் ஊனமுற்ற 14 வது கஜபா படையணியின் மற்றுமொரு சிப்பாய்காக தலுக்கொல்லயில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று வியாழன் (27) கையளிக்கப்பட்டது. 3 வது மற்றும் 10 வது கஜபா படையணிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வீட்டின் திறப்பு விழா நிகழ்வின் பிரதம அதிதியாக 111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க கலந்துகொண்டார்.

இதே வேளை, வீட்டு பயனாளிக்கு 32” LED தொலைக்காட்சி, எரிவாயு அடுப்பு மற்றும் ரைஸ் குக்கர் ஆகியவை புதிய வீட்டிற்கான வீட்டு உபயோகப் பொருட்களாக வழங்கப்பட்டன. 3 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் சமீர அம்பகஹடுவ மற்றும் 10 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சுதீர அபேநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கொவிட்-19 தொற்றுநோய் பாதிப்புகளுக்கு மத்தியலும் கஜபா படையணி மையத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அந்தந்த பட்டாலியன்களின் கட்டளை அதிகாரிகளின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், 3 ,14 மற்றும் 15 வது (தொ) கஜபா பட்டாலியன்களின் படையினரின் அயராத அர்ப்பணிப்பின் காரணமாக இவ் வீடு கட்டுமானத் திட்டம் திறம்பட முடிக்கப்பட்டது.

அந்த மூன்று குடும்பங்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் பங்களித்த படையினர், தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்தப்பட்ட கையளிப்பு விழாக்களில் பங்கேற்றனர்.