Header

Sri Lanka Army

Defender of the Nation

31st January 2022 20:58:25 Hours

7 வது இலங்கை சமிக்ஞை படையணி வீரர்கள் கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி

தியத்தலாவ முத்துக்குமாரு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரப்பந்தாட்ட போட்டியில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளையின் கீழ் உள்ள படையலகுகளை பிரதிநிதிபடுத்தும் எட்டு கரப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன.

7 வது இலங்கை சமிக்ஞைப் படையணிக்கும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி புதன்கிழமை (26) இடம்பெற்றதுடன் இறுதிப் போட்டியில் 7 வது இலங்கை சமிக்ஞைப் படை வீரர்கள் 2-0 என்ற கோல் கணக்கில் சம்பியன்ஷிப்பை வென்றனர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள், இரண்டாம் இடம் பெற்றவர்கள் மற்றும் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

இவ் விருது வழங்கும் நிகழ்வில் சில சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.