Header

Sri Lanka Army

Defender of the Nation

31st January 2022 21:08:07 Hours

முதலாவது படையணியினால் கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு 'பூஸ்டர்' தடுப்பூசி வழங்கல்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள முதலாவது படையணி தலைமையகம் மற்றும் கிளிநொச்சி இராணுவத் தள வைத்தியசாலை ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் , சனிக்கிழமை (29) கிளிநொச்சி விடியல் மற்றும் வானவில் பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட் 19 தொற்றுக்கான தடுப்பூசி வழங்கப்பட்டது.

முதலாவது படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் கிளிநொச்சியில் உள்ள இராணுவத் தள வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்களுடன் இத்திட்டத்தை நெருக்கமாக ஒருங்கிணைத்தார். பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முன்பு இந்த பொதுமக்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்கனவே பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், முதலாவது படையணி தலைமையகத்தின் படையினர் இந்தத் திட்டத்தை ஆரம்பித்தனர். இதன்படி, இரு தொழிற்சாலைகளிலும் மொத்தம் 600 பணியாளர்கள் சனிக்கிழமை (29) பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர்.

சுகாதார நெறிமுறைகள் மற்றும் தொற்று நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை கடைபிடித்து இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.