Header

Sri Lanka Army

Defender of the Nation

30th January 2022 22:39:37 Hours

தியத்தலாவ துப்பாக்கி சுடும் பயிற்சிப் பாடசாலையில் தொழில்நுட்ப ஆயுதப் பயிற்சி பிரிவு திறந்து வைப்பு

தியத்தலாவ துப்பாக்கி சுடும் பயிற்சிப் பாடசாலைக்கு இந்தியா இராணுவத்தால் பரிசளிக்கப்பட்ட சிறிய ரக ஆயுதப் பயிற்சி தொழில்நுட்ப முறைமையானது இன்று (29) பிற்பகல் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தியா இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே அவர்கள் இலங்கை இராணுவத்தின் மீதான நல்லெண்ணம் ஒத்துழைப்பு, மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறித்த பயிற்சி ஆயுதங்களை பரிசாக வழங்கினார். இதற்காக துப்பாக்கி சுடும் பயிற்சிப் பாடசாலை வளாகத்தில் தனி பயிற்சியறையொன்று அமைக்கப்பட்டது.

துப்பாக்கி சுடும் பயிற்சிப் பாடசாலை மற்றும் இராணுவ சிறிய ரக ஆயுத சங்கத்தின் தலைவருமான பிரிகேடியர் விபுல இஹலகே அவர்களால் அன்றைய பிரதம அதிதி அன்புடன் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, பயிற்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சிகளை இலகுவாக மேற்கொள்ளும் முகமாக அமைக்கப்டபட்ட குறித்த அறையானது பிரதம அதிதியால் திறந்துவைக்கப்பட்டது.

பின்னர் பிரிகேடியர் விபுல இஹலகேவுடன் இணைந்து ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் குறித்த புதிய பயிற்சி ஆயுத உபகரணங்களை உன்னிப்பாகக் கவனித்து தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதுடன் அந்த தொழில்நுட்பத்தினுடனான புதிய ஆயுதங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நீடித்த பயிற்சி அமர்வுகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து , துப்பாக்கி சுடும் பயிற்சிப் பாடசாலையின் படையினரால் வழங்கப்பட்ட நேரடி செயல் விளக்கங்களை பிரதம விருந்தினர் பார்வையிட்ட தளபதி இந்த விஜயத்தின் நினைவு அம்சமாக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.