Header

Sri Lanka Army

Defender of the Nation

30th January 2022 06:24:57 Hours

கென்பெராவுக்கான புதிய ஆலோசகருக்கு இராணுவ தளபதி அனுபவப் பகிர்வுடன் வாழ்த்து

அவுஸ்திரேலியாவின் கென்பராவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகாரியலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் பெற்ற இலங்கை கடற்படையின் கெப்டன் (ஜி) எஸ்.பி. கத்ரியாராச்சி அவர்கள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை இன்று (28) காலை இராணுவ தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் தூதுவர் மற்றும் பிரதி நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதியாக நியமனம் பெற்ற முதல் இராணுவ அதிகாரியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களே விளங்குவதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் உயர் சேவையில் ஈடுபட்ட முதல் இலங்கையர் என்ற பெருமையை அவர் கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும். அதனால் ஐநா பொதுச்செயலாளரின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டிய அமைதிகாக்கும் பணிகள் தொடர்பில் அவர் பெற்ற அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

"அவுஸ்திரேலியாவில் உள்ள இந்த அலுவலகத்திற்கான உங்கள் நியமனம், நமது நாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது ஆஸ்திரேலியா எங்கள் நாட்டுடன் நல்ல உறவைப் பேணிவரும் நாடாகும். இரு நாடுகளுக்கும் இடையே எந்தளவு உறவுகள் மேம்படுத்தப்பட முடியும் என்பது தொடர்பில் நீங்கள் அவதானம் செலுத்த வேண்டும் அந்த உறவுகளை புதிதாக்க உங்களது பங்களிப்பு அவசியமாகும். குறிப்பாக அந்நாட்டு சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் போது நமது நாடு தொடர்பில் அவர்களுக்கு தவறான அபிப்பிராயங்களை உருவாக்கும் வகையில் செயற்பட கூடாதெனவும், இராஜதந்திரி என்ற வகையில், அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு ஆலோசகராக மட்டுமல்லாது, அவர்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் நாட்டின் பிரதிநிதியாகவும் செயற்பட வேண்டும். புதிய அலுவலகத்திற்கான நியமனத்தை பெற்றுக்கொண்டதால் உங்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, நீங்கள் உயர்வான இடங்களை அடையும் போது உங்கள் நிறுவன்தை சார்ந்தவர்களுக்கான வாய்ப்புக்களை ஈட்டித்தருவதாக அமையுமெனவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.

அதேபோல் தம்மிடத்தில் உதவிகளை எதிர்பார்ப்பவர்களின் மனங்களை வெற்றிகொள்ளும் வகையிலும், புலம்பெயர்ந்தவர்களை நேரடியாக தொடர்பு கொள்வதோடு அவர்களுடனான உறவுகளை பேண வேண்டுமெனவும் கூறினார். மேலும் அங்குள்ள புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையின் உண்மை நிலவரம் தொடர்பில் அறியாமல் உள்ளனர். எனவே, இராஜதந்திரியாக உங்களது நியமனக் காலத்தில் அவர்களுக்கு உண்மைகளை உணர்த்துவது அவசியமென அறிவுரைத்த தளபதி அவர் வெளிநாட்டில் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஜெனரல் சவேந்திர சில்வா அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, அவருக்கு சிறந்த ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்தார்.