Header

Sri Lanka Army

Defender of the Nation

30th January 2022 17:16:18 Hours

இராணுவத் தளபதி தியத்தலாவையில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்களை அவதானித்தார்

இலங்கை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா படையணிகளுக்கு இடையேயான போர் துப்பாக்கிச் சூடு போட்டி - 2021 இன் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சனிக்கிழமை (29) காலை தியத்தலாவ சென்ற பொழுது கரிஸன் வளாகத்தில் தற்போது நடைபெற்று வரும் இரண்டு அபிவிருத்தி மற்றும் அழகுபடுத்தல் திட்டங்களை பார்வையிட்டார்.

அவர் முதலில் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி நடைபெறும் முதலாவது கெமுனு ஹேவா பயிற்சி பாடசாலை வளாகத்திற்கு வருகைதந்தார். அவர் அங்கு தங்கியிருந்த காலத்தில், பயிற்சி பெறுவோர் மற்றும் பாடசாலையின் வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து நெருக்கமாக விசாரித்து, அங்கு பணிபுரியும் அதிகாரிகளிடம் கலந்துரையாடினார். அதன் பின்னர், தியத்தலாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள அதிகாரிகள் விடுதி வளாகத்தின் கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகளை பார்வையிடுவதற்கு முன்னர், இராணுவ தளபதி 7 வது இலங்கை சமிக்ஞைப் படையணி முகாம் மற்றும் 17 வது பொறியாளர் சேவைகள் படையணி முகாம் என்பவற்றின் நிர்மாண மற்றும் புனரமைப்புத் திட்டங்களை பார்வையிட்டார்.

இராணுவத் தளபதி நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களை உன்னிப்பாகக் கவனித்து படையினருடன் உரையாடி, அந்தத் தளங்களுக்குப் பொறுப்பான கட்டளை அதிகாரிகளுக்கும், அங்கு இருந்த திட்ட அதிகாரிகளுக்கும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார். அழகிய நிலப்பரப்பு காட்சிகள் மற்றும் இயற்கை சூழலுக்கு எந்த இடையூறும் இல்லாமல் சுற்றுச்சூழல் நட்பு அக்கறைகளுடன் பொருந்தக்கூடிய வகையில் அனைத்து கட்டுமானங்களும் புதிய வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை எடுத்துரைத்தார்.

இந்த மேற்பார்வை விஜயங்களில் மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா 7 வது இலங்கை சமிக்ஞைப் படையணி மற்றும் 17 வது பொறியியல் சேவைகள் படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.