Header

Sri Lanka Army

Defender of the Nation

28th January 2022 12:00:52 Hours

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ வீரர்களுக்கு 3 ம் இடம்

மஹரகம தேசிய இளைஞர் மன்றம் கேட்போர் கூடத்தில் 2022 ஜனவரி 22 முதல் 23 வரை நடைபெற்ற தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2021 இல் இலங்கை இராணுவ மல்யுத்த வீரர்கள் அணி 3 வது இடத்தை வென்றது.

இப்போட்டியில் இராணுவ வீரர்கள் 2 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

கடற்படை, விமானப்படை அணிகள் உட்பட நாட்டிலுள்ள 10 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் இப்போட்டிகளில் பங்குகொண்டனர்.