Header

Sri Lanka Army

Defender of the Nation

28th January 2022 08:00:52 Hours

இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பில் கிளிநொச்சி கிராம மக்களுக்கு நடமாடும் கண் சிகிச்சை முகாம்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 57 வது படைத் தலைமையகத்திற்கு கொமர்ஷல் வங்கி மற்றும் அநுராதபுரத்தில் உள்ள "மை விஷன்" கண் சிகிச்சை மையம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து வழங்கிய கூட்டு அனுசரணையில் 571 வது பிரிகேட் படையினர் கிளிநொச்சி பகுதியுள்ள கிராம மக்களுக்கு இலவச நடமாடும் கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச கண்ணாடிகளை வழங்கும் நிகழ்வை சனிக்கிழமை (22) நடத்தினர்.

இராணுவத்தின் ‘முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2025’ க்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சமூக பணியானது பார்வைக் குறைபாடுள்ள 167 கிராம மக்கள் பரிசோதிக்கப்பட்டனர். இந்த நடமாடாடும் சிகிச்சை முகாமில் கண் நோய் தொடர்பிலான நிபுணர்கள், தாதியர்கள் கலந்துகொண்டிருந்ததோடு அவர்களின் பரிந்துரைக்கமைய 156 பேருக்கு மூக்குகண்ணாடிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும், பார்வை குறைப்பாடுடன் இருந்த பலரும் மேலதிக சிகிச்சைகளுக்காக அரச வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் 57 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, 571 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கம்லத் மற்றும் அவரது படையினர் இணைந்து நடமாடும் வைத்திய சேவை நடாத்துவதில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. இந்திக திலகஹேவ மற்றும் கனிஷ்ட நிறைவேற்று அதிகாரி திரு மொஹான் சமரதுங்க, இலங்கை வங்கி ஒன்றியத்தின் உறுப்பினர்கள், பி.டி. செபஸ்டியன் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் திரு நாமல் கருணாரத்ன, புகழ்பெற்ற கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமித் தென்னகோன் ஆகியோர் கலந்துகொண்டனர். அனுராதபுரத்தில் உள்ள 'மை விஷன்' கண் பராமரிப்பு மையத்தின் சிரேஷ்ட மற்றும் இளைய நிர்வாக அலுவலர்கள் இக் குழுவுடன் இணைந்து இத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்தனர்.