Header

Sri Lanka Army

Defender of the Nation

28th January 2022 08:30:52 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியினால் புதிய பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு

பொலன்னறுவை அபயபுர மகா வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி கொண்ட பாடசாலைக் கட்டடத்தின் திறப்பு விழா நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவ தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி வியாழக்கிழமை (20) கலந்து கொண்டார்.

இக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் அத்தனகல்ல ஸ்ரீ அரஹத்த பூரண ரஜமஹா விகாரையின் பிரதமகுருவான வண. கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த நாயக்க தேரரின் அனுசரணையுடன், சோமாவதிய ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வண. பஹமுனே ஸ்ரீ சுமங்கல அநுநாயக்க தேரரின் ஒருங்கிணைப்பின் மூலம் நிர்மாணிக்கப்பட்டது. சுப வேளையில் அனுசரணையாளர் வண. பன்னில ஸ்ரீ ஆனந்த நாயக்க தேரர் மற்றும் பல சமயப் பிரமுகர்கள் மற்றும் கிழக்கு தளபதி ஆகியோர் இணைந்து புதிய மூன்று மாடிக் கட்டிடத்தின் நினைவுபடிகத்தை திரைநீக்கம் செய்த பின்னர் நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.

இத் திறப்பு விழாவில் 23 வது படைப்பிரிவு தளபதி, 233 வது பிரிகேட் தளபதி, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.