28th January 2022 07:30:52 Hours
படையினர் மற்றும் பொது மக்களுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் கல்விளான் பகுதியிலுள்ள சேவியர் தேவலாய வளாகத்தில் 14 ஜனவரி 2022 அன்று வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவின் 651 வது பிரிகேடின் 19 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
65 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களின் உதவியின் கீழ் 19 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியவர்களுடன் 651 வது பிரிகேட் தளபதியினால் வழங்கபட்ட அறிவுறுத்தல்களுக்கமைய இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, தேவாலய அதிகாரிகளால் படையினரின் நல்லிணக்க முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.