Header

Sri Lanka Army

Defender of the Nation

29th January 2022 23:51:14 Hours

மாலியில் உள்ள இலங்கைக் குழு "மிகப்பெரிய சொத்தாகும்" ஐ.நா சிறப்புப் பிரதிநிதி டுவிட்டர் பதிவு

மாலிக்கான பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியும், மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் பல பரிமாண நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான தலைவருமான திரு எல் காசிம் வானே, இவ்வாரத்தின் ஆரம்பத்தில் மாலிக்கு வருகை தந்த இலங்கை இராணுவ குழுவிற்கு பாராட்டுகளை தெரிவித்தார். அதற்கமைய, “மாலியில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இலங்கை படையினர் மிகப் பெரிய சொத்தாவர்” எனவும் சவாலான பாதுகாப்பு சூழலில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திவரும் இலங்கை படையினருக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வார முற்பகுதியில், ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறப்புத் தூதுவரும் மாலியில் உள்ள மினுஸ்மா அமைதி காக்கும் நடவடிக்கையின் தலைவர் எல். காசிம் வெய்ன் மற்றும் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட தூதுக்குழுவினருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது “நாடு கடந்த சவால் மிக்க சூழலில் இலங்கை பணியாற்றும் விதம் மிகவும் சிறப்பானது’ “அவர்கள் அமைதிகாக்கும் நடவடிக்கைகளின் பெரும் சொத்தாவர்” என மாலிக்கான பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியும், மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் பல பரிமாண நடவடிக்கைகள ஒருங்கிணைப்பதற்கான தலைவருமான திரு எல் காசிம் வானே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை இராணுவ வழங்கல் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் இந்துசமரகோன், காலாட் படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தம்மிஹேவகே மற்றும் போர்கருவிகள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஹிரோஷா வணிகசேகர ஆகிய இலங்கை குழுவினர் நாடுகடந்த பணிக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பிலான உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக ஜனவரி 12-19 திகதிகளில் மாலிக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸின் பிரதிநிதியவர்களுடன் மேற்படி சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி சந்திப்பின் பின்னர், ஐநாவின் சிறப்பு பிரதிநிதியினால் இலங்கை அமைதிகாக்கும் பணிக்குழுவின் செயற்பாடுகளுக்கு பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

தற்போது, 20 அதிகாரிகள் மற்றும் 223 சிப்பாய்கள் உள்ளடங்கலாக இலங்கையின் 3 வது குழுவானது வன்முறைச் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடி மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஐநா வின் வேண்டுகோளுக்கினங்க இலங்கை இராணுவ குழுக்கள் மாலிக்கு தொடர்ச்சியாக அனுப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

டுவிட் பதிவை கீழே காணலாம்