Header

Sri Lanka Army

Defender of the Nation

27th January 2022 08:51:15 Hours

அரசு நிறுவனங்களுக்கு இடையிலான எல்லே போட்டி – 2022 இல் இராணுவ எல்லே வீரர்களுக்கு வெற்றி

அரச நிறுவனங்களுக்கிடையிலான எல்லே போட்டி – 2022, இலங்கை இராணுவ எல்லே அணி உட்பட இருபது அணிகளின் பங்குபற்றுதலுடன் 23 ஜனவரி 2022 முதல் 25 ஜனவரி 2022 வரை அம்பாறை மாவட்ட பொது மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டிக்கு தகுத்தி பெற்ற இலங்கை இராணுவ எல்லே அணி மற்றும் ஜா-எல பிரதேச சபை அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை இராணுவ எல்லே அணியினர் வெற்றிகொண்டனர். இப் போட்டியின் சிறந்த களத்தடுப்பாளராக லான்ஸ் கோப்ரல் கே.கே.ஜே குமார தெரிவு செய்யப்பட்டார்.