Header

Sri Lanka Army

Defender of the Nation

26th January 2022 10:52:01 Hours

வன்னி அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு இருநாள் தலைமைத்துவ செயலமர்வு

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளை அலகுகளின் கீழ் சேவையாற்றும் 110 படையணி சாஜண்ட மேஜர்கள், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் - தரம் II மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 13 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் 07 படையணி் சாஜண்ட மேஜர்களின் பங்கேற்புடன் ஜனவரி 18 -19 ஆம் திகதிகளி்ல் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் சுய ஆற்றல்கள், தலைமைத்துவ பண்புகள் மற்றும் கட்டளையிடும் திறன் என்பவை தொடர்பிலான பயிற்சி செயலமர்வொன்று நடைபெற்றது.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்களின் அறிவுரைக்கமைய முன்னெடுக்கப்பட்ட மேற்படி செயலமர்வில் இராணுவ தலைமையகத்தின் படையணி சாஜண்ட் மேஜர் அதிகாரவாணையற்ற அதிகாரி - I ஐபீஜீஎம்எஸ்எஸ் ஜயவீர, தியதலாவையிலுள்ள இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் முன்னாள் படையணி சாஜண்ட் மேஜர் அதிகாரவாணையற்ற அதிகாரி – I பீடீஎஸ் ஹேமச்சந்திர (ஓய்வு) மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரி – I கேஆர்ஏ செனவிரத்ன (ஓய்வு) ஆகியோரும் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

மேலும் இந்த செயலமர்வில் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள், நிர்வாகத் திறன்கள், இறுதிச் சடங்குகள், ஒழுக்கம் என்பன தொடர்பில் கற்பிக்கப்பட்டதோடு, இந்த செயலமர்வில் 56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எல்டிஎஸ்எஸ் லியனகே அவர்களும் விரிவுரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

செயலமர்வின் நிறைவில் 56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எல்டீஎஸ்எஸ் லியனகே அவர்களினால் செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்து அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.