Header

Sri Lanka Army

Defender of the Nation

26th January 2022 10:56:26 Hours

651 மற்றும் 652 வது பிரிகேடினரால் இந்து கோவில் வளாகத்தில் சிரமதான பணி

தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு 65 வது படைப்பிரிவின் 651 மற்றும் 652 வது பிரிகேடுகளின் கீழ் காணப்படும் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி , 19 வது இலங்கை இலேசாயு காலாட்படையணி மற்றும் 17 (தொ) இலங்கை இலேசாயு காலாட்படையணி சிப்பாய்களினால் ஜனவரி 13 ஆம் திகதி இந்து கோவில் மற்றும் சுகாதார வைத்தி அதிகாரி அலுவலக வளாகங்களில் சிரமான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய, சமரச மற்றும் நல்லிணக்க முயற்சியாக முலங்காவில் விஷ்ணு கோவில், சிவன் இந்து கோவில் மற்றும் பாலிநகர் குட்டிப் பிள்ளையார் கோவில் வளாகங்களில் உள்ள கழிவுகளை முழுமையாக அகற்றிய படையினர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அதே தினத்தில் அப்பகுதியில் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தையும் படையினர் தூய்மைப்படுத்தினர்.

65 வது படைப்பிரிவு தளபதி மற்றும் கட்டளை அதிகாரிகள் ஆகியோரால் இத்திட்டம் கண்காணிக்கப்பட்டது.