24th January 2022 07:00:16 Hours
ஜனாதிபதி அவர்களினால் இராணுவத்திடம் ஒப்படைக்கபட்ட மாத்தறை மாவட்ட மெதிரிபிட்டிய மற்றும் தொம்பகொட இடையேயான 1.73 கிலோமீற்றர் நீளமான வீதியின் புனரமைப்பு பணிகள் 5 வது இலங்கை கள பொறியியல் படையணியினரால் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதிமேதகு ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை திட்டத்திற்கு அமைவாக நாடாளவிய ரீதியிலுள்ள 100,000 கிலோமீற்றர் நீளமான வீதி கட்டமைப்பை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலுக்கமைய இலங்கை இராணுவப் பொறியியலாளர்களினால், சீரமைப்பு, விரிவுபடுத்துதல், செப்பணிடுதல் மற்றும் கிராமப்புறங்களின் வீதி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் மண்ணை அகற்றுதல் மற்றும் செப்பணிடுதல் பணிகளில் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர மற்றும் பொறியியல் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன ஆகியோர் தமது மேற்பார்வையின் கீழ் உள்ள படையினருக்கு அந்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக உயர் தரத்தைப் பேணுவதற்கான வழிகாட்டல்களை வழங்குகின்றனர்.