24th January 2022 08:00:16 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வவுனியா, ஆசிக்குளம் பகுதியில் வசிக்கும் ஏழைக் குடும்பமொன்றிற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க அவர்களினால் 14 ஜனவரி 2022 அன்று பயனாளி குடும்பத்தாருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
திருமதி மோகன்ராஜ் மகேஸ்வரி தம்பதிகளின் வாழ்க்கை நிலைமை தொடர்பில் பிரதேசத்திலுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு தெரியவந்ததை தொடர்ந்து அவர்களினால் 562 வது பிரிகேடிற்கு மேற்படி விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்தி 56 வது படைப்பிரிவின் 562 வது பிரிகேடிற்கு வவுனியாவிலுள்ள சேப்டி கிரெடிட் மற்றும் சேப்டி கண் கெயார் நிறுவனங்களின் பணிப்பாளர் திரு மகேந்திரராஜா மயூரதன் அவர்களினால் வழங்கப்பட்ட நிதி உதவியை கொண்டு 17 (தொ) இலங்கை சிங்கப் படையணியின் பொறியல் நிபுணத்துவம் மற்றும் ஆளணி வளத்தை பயன்படுத்தி இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திரு மயூரதன் அவர்கள் அவரது பாரியாருடன் கலந்துகொண்டிருந்ததோடு, மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க நிகழ்வின் பிரதம அதியாக கலந்துகொண்டு நாடா வெட்டி திறந்து வைத்து புதிய வீட்டை விதவை பெண் மற்றும் அவரது பிள்ளைகளிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் 562 வது பிரிகேட் தளபதி ஏ.எம்.எஸ். பிரேமவன்ச, 56 வது படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி கேணல் பிரதீப் கருணாநாயக்க, 56 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டிணன் கேணல் டபிள்யூகேஏஎஸ் பிரியந்தலால், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவி்ல் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் கேடீஎச்எம்டபிள்யூஜேகே ஹெரத், 17 (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்கே எச்.கே.குமாரசிறி, கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆசிக்குளம் கிராம சேவகப் பிரிவு சமூர்த்தி அதிகாரி, இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஏனைய அழைப்பு விடுக்கப்பட்டவர்களும் சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.