23rd January 2022 07:23:52 Hours
இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படையினர் 20 வயதிற்கு மேற்பட்டோருக்கு பைசர் பூஸ்டர் தடுப்பூசியை வழங்கி வருவதுடன், கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டில் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகின்றனர்.
பிராந்திய பொது சுகாதார சேவை அதிகாரி அலுவலகங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படையினர் மற்றும் இந்த செயல்முறையை நடத்தும் அதிகாரிகள், அனைத்து இலங்கையர்களும் ஒரே தேசமாக ஒன்றிணைந்து நிற்பதற்காக தேசிய தேவையாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செயல்முறையானது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பணிப்பில் முதலாவது படையணி தளபதி மற்றும் ஆறு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகளின் மேற்பார்வையின் கீழ் ஊக்குவிக்கப்படுகிறது.
இந்த செயல்முறை தடுப்பூசி மையங்களிலும், நடமாடும் தடுப்பூசி அலகுகள் மூலமாகவும், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வயதானவர்கள், அங்கவீனமானவர்கள், சிரேஸ்ட பிரஜைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.