Header

Sri Lanka Army

Defender of the Nation

19th January 2022 21:04:18 Hours

இணை அனுசரணையில் யாழ். மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

வறிய மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் முகமாக, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவின் கீழுள்ள 521 வது பிரிகேட் தலைமையக படையினர் தைப்பொங்கள் பண்டிகையை முன்னிட்டு, அவபிரிகேட் பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களின் நலன்கருதி உடுப்பிட்டி மகளிர் பாடசாலையில் வியாழக்கிழமை (13) அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அடங்கிய 50 பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அச்சுவேலி பிரதேசத்திலுள்ள 'ஸ்டார் புட் சிட்டி'யின் உரிமையாளர் திரு ஸ்ரீ கிருஷ்ணமேனன், திருமதி சுகந்தி, சில வியாபாரிகள், பிரிகேட் தளபதி மற்றும் 521 வது பிரிகேடின் சகல அதிகாரிகளும் வறிய மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் வழிகாட்டலின் கீழ், 52 வது படைப் பிரிவு தளபதி பிரிகேடியர் எல்எல் சல்வத்துர அவர்களின் பணிப்புரைக்கமைய 521 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமந்த விக்ரமசேனவின் அவர்களினால் இத்திட்டம் வழிநடத்தப்பட்டது.

இந்நிகழ்வில், 52 வது படைப் பிரிவு தளபதி பிரதம விருந்தினராக கலந்துகொண்டதோடு, கௌரவ விருந்தினராக வடமாகாண கல்வி, கலாசார மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கான ஊக்குவிப்பு தொகைகளை வழங்கி வைத்தனர்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி , 52 வது படைப்பிரிவு மற்றும் 521 வது பிரிகேடின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டனர்.