Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2022 09:15:53 Hours

படையினரின் பயிற்சிகள் தொடர்பில் வன்னி தளபதி கண்காணிப்பு

2021 டிசம்பர் 09 ஆம் திகதி கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி அமர்வுகளை கண்காணிப்பதற்காக , வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் வன்னி பாதுகாப்புப் படையின் கீழ் உள்ள போகொட பட்டாலியன் பயிற்சிப் பாடசாலைக்கு 2022 ஜனவரி 11 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டார்.

இரு வருடங்களுக்கு பின்னர் 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியினரால் பட்டாலியன் பயிற்சிகள் தொடரப்பட்டுள்ளதோடு, இவ்விஜயத்தின் போது வன்னி தளபதியவர்கள் 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான உரையொன்றினையும் நிகழ்த்தினார்.

அந்த உரையில் பயிற்சியின் போது ஒழுக்கத்தை பேணுதல் இராணுவத்தின் கௌவரத்தை உறுதிப்படுத்தல், பொறுப்புணர்வுடனான நடத்தைகள் மற்றும் தற்போது நடைமுறையிலிருக்கும் பசுமை விவசாய திட்டம் என்பன தொடர்பிலும் எடுத்துரைத்தார்.