Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2022 09:45:53 Hours

தைப்பொங்கள் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் வண்ணமயமான “பட்டம் பறக்கும்” போட்டிகள்

தை பொங்கல் தினத்தன்று (14) காங்கேசன்துறை கடற்கரையோரப் பகுதியில் இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என பெருமளமானவர்கள் திரளாகக் கூடி , இந்துக்களின் பண்டிகையை கொண்டாடும் வகையில் கரையோர பகுதியில் நடைபெற்ற மாபெரும் பட்டம் பறக்கும் திருவிழாவைக் கண்டு மகிழ்ந்தனர்.

யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களினால் 51 வது படைப்பிரிவினருக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிப்பாய்கள், யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட இளவாலை இளைஞர் கழகத்த்தின் ஒத்துழைப்புடன் மேற்படி விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்விழாவிற்காக, சிவில் மற்றும் இராணுவத்தினரால் 200 க்கும் மேற்பட்ட பட்டங்கள் தயார்படுத்தப்பட்டிருந்த நிலையில், வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். கொவிட் – 19 காரமாண இரு வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற இந்த போட்டிகளில் அரசாங்க அதிகாரிகள், ஆயிரக்கணக்கான பொது மக்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வானது யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் பரிந்துரைக்கமைய தெலிப்பளை பிரதேச செயலக அலுவலகம் மற்றும் அப்பகுதியிலுள்ள ஏனைய இளைஞர் கழகங்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.

51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களினால் இந்நிகழ்வில் பங்கெடுக்குமாறு இராணுவ சிப்பாய்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த வடமாகாண ஆளுநர் திரு ஜீவன் தியாகராஜா விழாவை வண்ணமயமாக்கும் வகையில் இராணுவத்தினர் வழங்கும் பங்களிப்பிற்கு யாழ். குடாநாட்டில் சேவையாற்றும் அனைத்து படையினருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.