17th January 2022 12:07:00 Hours
இராணுவ பதவி நிலை பிரதானியாக நியமனம் பெற்றிருக்கும் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஞாயிற்றுக்கிழமை (16) சாலியபுரவில் உள்ள கஜபா படையணி தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானியாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் படையணிக்கான முதல் விஜயத்தை மேற்கொண்ட தளபதிக்கு படையணியின் நிலையத் தளபதி கேணல் ஷிரந்த மில்லகல அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது. அதேநேரம் நிர்வாகச் சபை உறுப்பினர்களும் பதவி நிலை பிரதானிக்கு வரவேற்பளித்தனர்.
அதனையடுத்து இராணுவ பதவி நிலை பிரதானியால் கஜபா படையணியின் ஸ்தாபக தலைவர் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் உருவச் சிலைக்கு மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கஜபா படையணியினரால் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையை தொடர்ந்து “கெட்டேரியன்ஸ் இல்லம்” இற்கு விஜயம் மேற்கொண்டதன் நினைவம்சமாக மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நிர்வாக சபை உறுப்பினர்கள், படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், நிலையத் தளபதி மற்றும் படையணி பணியாளர்களும் கலந்து கொண்டனர்.