Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2022 09:30:53 Hours

59 வது படைப்பிரிவினர் சுனாமி பேரலை தொடர்பில் மீளாய்வு

இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் தாக்கம் மற்றும் சுனாமி பேரலையினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்தல் தொடர்பிலான விசேட மீளாய்வு மாநாடு வெள்ளிக்கிழமை (7) முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 வது படைப் பிரிவு தலைமையகத்தில் இடம்பெற்றது.

59 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டி.சூரிய பண்டாரவின் தலைமையிலை நடைபெற்ற இந்த மாநாட்டில், 591 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ பெரேரா, 592 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த ஆராச்சிகே, 59 வது படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி கேணல் எஸ்பீ மலவரகே, கேணல் நிர்வாகம் மற்றும் வழங்கல் கேணல் வைசீடீபி பியசேன, 12 வது இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டீகே கலுவெவ, 24 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் என்டீஎஸ நல்லப்பெரும, 19 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் யூஜேஎஸ் சரத்சந்திர மற்றும் 5 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எம்பி ஹெட்டியராச்சி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த அமர்வில் முன்னைய சுனாமி அனர்த்தத்தின் போது ஏற்பட்ட பிரச்சினைகள், சவால்கள், தீர்வு நடவடிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் மாற்றும் அவற்றுக்கான மாற்று தீர்வுகள் என்பன தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.