17th January 2022 10:57:42 Hours
பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் கொள்கைகமைவாக, சேதன பசளையுடன் கூடிய வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிப்பதற்காகவும் பசுமை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மாணவர்களை ஈடுபடுத்தும் நோக்கிலுமான விழிப்புணர்வு செயற்றிட்டம் வியாழன் (13) வடமராட்சியில் உள்ள வலயக் கல்வி அலுவலக வளாகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டது.
"பசுமை விவசாயத்தை ஊக்குவித்தல், வீட்டுத்தோட்டங்கள் ஊடாக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்" எனும் தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வு செயற்றிட்டம் இடம்பெற்றது.
55 வது படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்ன அவர்களுடன் இணைந்து யாழ். பாதுகாப்புப் படைத் தலைமயைக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் வழிகாட்டுதலின் பேரில் 55 வது படைப்பிரிவின் கீழுள்ள 551 வது பிரிகேட் படையினர் இந்த முன்னோடித் திட்டத்தை ஆரம்பித்தனர். சேதன பசளைகளைப் பயன்படுத்துதல் மற்றும் அவர்களின் பாடசாலை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சேதன பசளையை பயன்படுத்துவதன் மூலம் வீட்டுத் தோட்டம் செய்ய ஊக்குவிக்கப்படும் என்பதற்காகவும் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், மாணவர்கள் மற்றும் சமூகம் ஆகிய இருபிரிவினரின் பங்கேற்பின் மூலம் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கும், பேணுவதற்கும் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய பங்குதாரர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றன. மேலும் இராணுவத்தினரால் உற்பத்தி செய்யப்பட்ட சேதன பசளைகளும் பங்குபற்றியவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டன. வலயக் கல்வி அலுவலகத்தினுள் இதற்காக தயாரிக்கப்பட்ட மாதிரி வீட்டுத்தோட்டத்தில் விதைகள் மற்றும் பல்வேறு வகையான மரக்கறி வகைகளின் செடிகளும் நடப்பட்டன. வடமராட்சி வளாகத்தில் இத்திட்டம் அடையாளப்படுத்தும் வகையில் நடைபெற்றன.
551 வது பிரிகேடின் ஒருங்கிணைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த முன்னோடித் திட்ட நிகழ்வில் 55 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்ன 551, 552 மற்றும் 553 வது பிரிகேட் தளபதிகள்,மற்றும் மாவட்ட செயலாளர் திரு.கே.மகேசன் பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி பிரதேச செயலாளர்கள், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், வடமராட்சியில் உள்ள 12 பாடசாலைகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் 55 வது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.