17th January 2022 07:30:53 Hours
பொறியியல் சேவை படையணியின் 72 வது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு படையணியின் சிப்பாய்கள் மத ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்வுகளில் பங்கெடுத்தனர்.
அதற்கமைய ஹங்வெல்ல ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல், வெள்ளவத்தையில் உள்ள மயூராபதி இந்து ஆலயம், பன்னிபிட்டியவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவற்றில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதோடு படையணி தலைமையகத்திலும் இரவு முழுவதுமான பிரித் பாராயணம் செய்யும் நிகழ்வுகளுடன் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.
பொறியியல் சேவை படையணியின் தளபதியும் பொறியியல் சேவை பணிப்பகத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் கேஎம்எஸ் குமார, பொறியியல் சேவை படையணியின் நிலையத் தளபதி மற்றும் மட்டுபடுத்தப்பட்ட எண்ணிக்கையிலான சிப்பாய்கள உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆண்டு நிறைவு தினமான (ஜனவரி 6) பொறியியல் சேவைப் படையணியின் உயிர்நீத்த சிப்பாய்கள் நினைவு கூரப்பட்டதோடு, நிகழ்விற்காக வருகைத் தந்த தளபதிக்கு படையினரால் பாதுகவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து தளபதியால் படையணி வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டதை தொடர்ந்து குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.