Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2022 06:30:53 Hours

அதிகாரவாணையற்ற அதிகாரியின் வீடு தீக்கிரையானதையடுத்து அவருக்கு இராணுவ தளபதி மற்றும் சேவை வனிதையர் பிரிவினால் புதிய வீடு

இராணுவ தலைமையகத்தில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் அதிகாரவாணையற்ற அதிகாரியின் வீடு அண்மையில் தீக்கிரையாகியிருந்த நிலையில், இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களின் அனுசரணை மற்றும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் ஊக்குவிப்பின் பலனாக மேற்படி அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு புதிய வீடு வழங்கி வைக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 121 வது பிரிகேடினரால் பதல்கும்புரவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வீடு 20 வது இலங்கை சிங்கப் படையணியினரால் புதன்கிழமை (05) பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி வீடானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 121 வது பிரிகேடின் 20 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் வீட்டின் நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க, 121 பிரிகேட் தளபதி பிரிகேடியர் டீயூஎம் சேரசிங்க மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளும் வீட்டை கையளிப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.