17th January 2022 07:00:53 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் இணைந்து வியாழக்கிழமை (13) டெங்கு நோய் பரவலை தடுக்கும் நோக்கில் வெலிகந்தவிலுள்ள லும்பினி ஆரம்ப பாடசாலை வளாகத்தில் சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்கள் படையினரின் ஆதரவுடன் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரி கேணல் உஷான் குணவர்தனவுக்கு பணிப்புரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.