Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2022 09:00:53 Hours

படையினரின் ஒருங்கிணைப்பில் 7 பாடசாலைகளின் 100 மாணவர்களுக்கு காலணிகள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவின் கீழுள்ள 592 வது பிரிகேடின் 23 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிப்பாய்களின் ஒருங்கிணைப்பில் ,அண்மித்த பகுதிகளில் காணப்படும் 7 பாடசாலைகளில் கல்வி பயிலும் 100 மாணவர்களுக்கான காலணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி வளாகத்திலுள் சனிக்கிழமை (08) நடைபெற்றது.

மேற்படி காலணிகளை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி அம்பிஷன் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருந்ததோடு, அவற்றை வழங்கி வைப்பதற்கான நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க அவர்களுடன் 59 வது படைப்பிரிவு தளபதி மற்றும் 591, 592 வது பிரிகேடிகளின் தளபதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

மேற்படி ஏழு பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததோடு, அதிகாரிகளும் சிப்பாய்களும் நிகழ்வில் கலந்துகொண்டு பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.