17th January 2022 06:00:53 Hours
முதலாம் படையின் 58 வது படைப்பிரிவின் கீழுள்ள 581 வது பிரிகேட் சிப்பாய்களின் சொந்த நிதி உதவியினூடாக கொட்டகலவில் அமைந்துள்ள கிறிஸ்லர் பார்ம் தமிழ் பாடசாலையில் கல்வி பயிலும் குறை வருமானம் பெரும் குடும்பங்களை சேர்ந்த 50 மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (4) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
581 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிலங்க பெர்னாண்டோ, பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோரினால் மேற்படி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்ய நிதி உதவி வழங்கப்பட்டது. மேற்படி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அவர்களது பெற்றோர்கள் இன்னல்களை எதிர்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு சிற்றூண்டிகளும் வழங்கப்பட்டன.
581 வது பிரிகேட் தளபதி மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.