17th January 2022 08:00:53 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் கீழுள்ள 141 வது பிரிகேட் சிப்பாய்களால் கட்டானாவில் உள்ள ஆறாம் பவுல் கல்லூரியில் பயிலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 45 மாணவர்களின் கற்றல் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான அனுசரணையானது 'செவனக் வேமு' அறக்கட்டளையினால் வழங்கப்பட்டது.
கொரோனா தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தலுக்கு பின்னர் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள மேற்படி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொதிகளில் புத்தகப் பைகள் மற்றும் எழுதுவினை பொருட்களும் உள்ளடங்கியிருந்தன.
141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே, சில சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், “செவனக் வெமு” அறக்கட்டளையின் செயலாளர் திருமதி விந்தானி ஷாரா ஆகியோருடன் சிப்பாய்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.