Header

Sri Lanka Army

Defender of the Nation

15th January 2022 10:18:18 Hours

இராணுவ ஒருங்கிணைப்பு மூலம் 35 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 54 வது படைப்பிரிவின் கீழுள்ள 542 வது பிரிகேட் படையினர் இசுர விக்கிரமாராச்சி அறக்கட்டளையின் "ஹதவதின்ம தருவந்த" எனும் திட்டத்தின் மூலம் 2022 ஜனவரி 02 ஆம் திகதி எம்என் / காயக்குளி ஆரம்பப் பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 35 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும் பொதுமக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கையாக தொடங்கப்பட்ட இந்நிகழ்வில் 542 வது பிரிகேட் தளபதி, 542 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி , கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், நன்கொடையாளர் திரு இசுர விக்கிரமாராச்சி மற்றும் அவ்வமைப்பின் உத்தியோகத்கர்கள், பாடசாலை அதிபர் , ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க மற்றும் 54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் யு.டி. விஜேசேகர ஆகியோர் நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.