14th January 2022 09:23:53 Hours
பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு தனிப்பட்ட முறையில் பரிசாக கிடைக்கப்பெற்ற பாதுகாப்பு உபகரணங்களை இராணுவத் தலைமையக இராணுவ சேவை வனிதையர் பிரிவினர் இன்று காலை (3) கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டன.
அமெரிக்காவின் இலங்கை சங்கம், மிட்வெஸ்ட் மற்றும் மெட்சர்பிளஸ் ஐக்கியம் அமெரிக்கா , ஜோன்ஸ் ஹோப்பின்ஸ் ஹெல்த்கெயார் சிஸ்டம் ஆகிய அமைப்புக்களால் கொவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், குறிப்பாக கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக இருந்த அவரது பங்களிப்பைக் கருத்தில் கொண்டு தனிப்பட்ட முறையில் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு பரிசாக வழங்கப்பட்ட சுமார் 200,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் சில இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் இணைந்து முகக் கவசங்கள், சத்திரசிகிச்சை கருவிகள், பாதுகாப்பு அங்கிகள், கையுறைகள் போன்றவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. 812 பெட்டிகள் கொண்ட தொகுதியை கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் பிரிகேடியர் ஏஎம்சி அத்தநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சு, இலங்கை இராணுவ வைத்திய படையணி மற்றும் மனித வள நிர்வாக பணிப்பகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் ஊடாக இராணுவம் நாடளாவிய ரீதியில் மிகவும் தேவையான வைத்தியசாலைகளுக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
புத்தாண்டின் முதல் வேலை நாளில் இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி வைத்தியசாலை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை கையளிப்பதற்கு முன்பு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதுடன் தேநிர் விருந்துபசாரத்திலும் கலந்துக் கொண்டார்.
வைத்திய சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் பி.ஏ.சி பெர்னாண்டோ, கொழும்பு இராணுவ வைத்தியசாலை முகாமைத்துவ மற்றும் பராமரிப்பு பணிப்பாளர் பிரிகேடியர் ஜூட் பெரேரா இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் துஷார பாலசூரிய, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.