13th January 2022 21:05:39 Hours
54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்களின் வழிகாட்டுதலின் கீ்ழ் 543 வது பிரிகேட் படையினரின் ஒத்துழைப்புடன் மன்னார் பகுதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது 2022 ஜனவரி 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டது.
இத்திட்டமானது மன்னார், பள்ளிமுனை கடற்கரை முன்பக்கம், பேசாலை ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இந்நிகழ்வில் 54 வது படைப்பிரிவு மற்றும் 543 வது பிரிகேட் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரிகள், மற்றும் மன்னார் மேலதிக சுகாதார சேவைகள் பணிப்பாளர் . மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி, மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள், மன்னார் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் உட்பட சுகாதார அதிகாரிகள் கலந்துகொண்டனர்.