13th January 2022 21:18:39 Hours
கிழக்கில் உள்ள வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் ஆஸ்திரேலியாவை வசிப்பிடமாக கொண்ட திரு நிஹால் உடுகம சூரியகே அவர்களால் வழங்கப்பட்ட அனுசரணையுடன், கந்தகாடு, வெலிகந்த பிரதேசத்தில் வசிக்கும் வசதியற்ற குடும்பத்திற்கு மேலும் ஒரு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் செவ்வாய்க்கிழமை (11) நாட்டப்பட்டது.
23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த மற்றும் 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹெவகே ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 9 வது கள இலங்கை பீரங்கி படையணியின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவள ஆதரவுடன் இந்த வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி, நன்கொடையாளர்கள் வழங்கிய நிதியுதவியுடன் அதன் நிர்மாண பனியை முன்மொழிந்தார்.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவில் விவகார அதிகாரி கேணல் உஷான் குணவர்தன, 9 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் தினேஷ் வணிகசேகர, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கோவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த விழாவில் கலந்து கொண்டனர்.