Header

Sri Lanka Army

Defender of the Nation

12th January 2022 19:04:53 Hours

நிக்கபிட்டிய குடும்பமொன்றிற்கு இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்டவுள்ள புதிய வீடு

பொலன்னறுவை மாவட்டத்தின் நிகபிட்டிய, பகமூன பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கான புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (10) கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமை சிவில் ஒருங்கிணைப்பாளர் கேணல் உதய குணவர்தனவின் பங்கேற்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் 7 வது இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சீ. ஹரிஸ்சந்திர, ஏனைய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு நிஹால் உடுகம சூரியகே அவர்களிடமிருந்து கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவியை கொண்டு, 23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த மற்றும் 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே ஆகியோரால் மேற்படி திட்டம் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நன்கொடையாளரின் உதவியுடன் 7வது இலங்கை பீரங்கிப் படையணியின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள உதவியுடன் திரு பீடி வசந்த என்பவருக்கான மேற்படி வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.