11th January 2022 18:00:56 Hours
இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் படையினர், கம்பஹா, குருநாகல், புத்தளம், கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசங்களில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டமொன்றை சனிக்கிழமை (8) ஆரம்பித்துள்ளனர்.
மேட்படி மாவட்டங்களில் பெய்த மழையின்காரணமாக டெங்கு நோயாளர்கள் பதிவாகியமையினை தொடர்ந்து மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களின் அறிவுறத்தலுக்கமைய அந்தந்த மாவட்டங்களில் உள்ள படைப்பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் பிரிவுகளில் உள்ள படையினரால் ஒரே நேரத்தில் குறித்த சமூகம் சார்ந்த டெங்கு ஒழிப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் அனைத்து பிரிவுகளிலும் இருந்து கலந்துகொண்ட 900 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுக்கு மேலதிகமாக 105 சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
படைப் பிரிவின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ஆகியோர் இத் திட்டத்தில் கலந்து கொண்டனர்.