11th January 2022 05:00:44 Hours
முலங்காவில் பட்டாலியன் பயிற்சிப் பாடசாலையில் பாடநெறி எண் 2 இல் புதிதாக இணைந்துகொண்டு பயிற்றுவிக்கப்பட்ட 308 புதியவர்கள் வெற்றிகரமாக தங்களது மூன்று மாதப் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை பீரங்கிப்படையணி, இலங்கை பொறியியலாளர்கள் படையணி, இலங்கை சமிக்ஞைப் படையணி, இலங்கை சிங்க படையணி, கஜபா படையணி, பொறியியலாளர் சேவைப் படையணி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, இலங்கை இராணுவ போர்கருவி படையணி, இலங்கை இராணுவ வைத்திய படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி ஆகியவற்றினை சேர்ந்த புதிய சிப்பாய்களால் பிரதம அதிதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பட்டாலியன் பயிற்சிப் பாடசாலையில் பிரதம பயிற்றுவிப்பாளரான லெப்டினன் கேணல் சுமித் பிரியந்த அவர்களின் அழைப்பின் பேரில் 651 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த பண்டார அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இப் பயிற்சி பாடநெறியில் பொறியியலாளர் சேவைப் படையணியின் சாதாரன சிப்பாய் ஏ.ஆர்.எஸ் செனவிரத்ன சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரராகவும், இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் எச்.ஜி.எஸ். சதீப பாடநெறியில் சிறந்த குழு வீரராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
உடற் பயிற்சியில் சிறந்த வீரராக இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சாதாரன சிப்பாய் எஸ்.சி.ஐ.டி சந்திரசிறி தெரிவு செய்யப்பட்டார்.
இந் நிகழ்வுகள் கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இடம்பெற்றதுடன் பட்டாலியன் பயிற்சிப் பாடசாலையில் உள்ள நிர்வாக ஊழியர்களுடன் அதிகாரிகள் உட்பட பயிற்றுனர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.