Header

Sri Lanka Army

Defender of the Nation

10th January 2022 14:10:53 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு மகளிர் கற்றல் உபகரணங்கள் நன்கொடை

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 72 வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படை தலைமையகத்தினால் 2021 டிசம்பர் 9 அன்று 2739 இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்காக 2.2 மில்லியன் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரக்கோன், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் மற்றும் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.