08th January 2022 08:00:35 Hours
54 வது படைப்பிரிவின் 7 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் 2022 ஜனவரி 08 அன்று 350 கிராம் கிரிஸ்டல் மெத் (ஐஸ்) போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.
தலைமன்னாரிலிருந்து மதவாச்சி வரையிலான புகையிரதத்தில் மன்னார் தொட்டிவெளி புகையிரத நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புகையிரதத்தினுள் கிடந்த அடையாளம் தெரியாத பையில் இருந்து போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எவ்வாறாயினும் இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் 3.5 மில்லியன் ரூபாயாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.