Header

Sri Lanka Army

Defender of the Nation

07th January 2022 13:00:22 Hours

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணிக்கு ஒரு வருட பூர்த்தி

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பினை மேம்படுத்துவதற்காக அம்பலாங்கொடை கரந்தெனியவில் உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணி தனது 1 வது ஆண்டு நிறைவை செவ்வாய்க்கிழமை (4) கொண்டாடியது.

2022 ஜனவரி 3 ம் 4 ம் திகதி படையணி தலைமையகத்தில் நடைபெற்ற ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் இராணுவ நிதி முகாமைத்துவத்தின் பணிப்பாளர் நாயகமும், இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

விழாவின் முதல் அங்கமாக போதி பூஜை நிகழ்வு இடம் பெற்றதுடன். அதனை தொடர்ந்து பிரதம விருந்தினருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் பிரதம அதிதி படையணி தலைமையகத்திற்குச் செல்லும் புதிய பாதையினை திறந்து வைத்துடன் ‘’வருசவிதான முதியோர் இல்லத்திற்கு’’ உபசரிப்பு மற்றும் நன்கொடையினையும் வழங்கி வைத்ததுடன் படையணியின் புதிய இணையத்தளத்தையினையும் ஆரம்பித்து வைத்தார்.

அங்கு வருகை தந்த படைத் தளபதி படையினர் மத்தியில் உரையாற்றியதுடன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதுடன் அரசாங்கத்தின் பசுமை விவசாய நடவடிக்கையில் இணைவதற்கான அவர்களின் முயற்சிகளை ஆர்வத்துடன் பாராட்டினார். பின்னர் அனைத்து தரப்பினருடனும் தேநீர் விருந்துபசாரதத்திலும் கலந்து கொண்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

நாட்டின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு வழிகாட்டுதலுக்காக பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு நன்றி தெரிவிக்கவும் அவர் மறக்கவில்லை.