08th January 2022 13:00:35 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57 வது படைப்பிரிவின் 573 வது பிரிகேடின் 9 வது விஜயபாகு காலாட்படை படையினர் புத்தாண்டு மற்றும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பாரதி புரம் பகுதியுள்ள 32 எழை குடும்பங்களுக்கு தலா 1500/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை முல்லைத்தீவு செபஸ்டியன் தேவாலய வளாகத்தில் வெள்ளிக்கிழமை (31) வழங்கி வைத்தனர்.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் தனிப்பட்ட ஒருங்கிணைப்பின் மூலம் உலர் உணவுப் பொதிகள் மற்றும் பரிசுகள் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் வழங்கப்பட்டது.
மேலும், அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு நத்தார் தாத்தாவினால் பரிசுப் பொதிகளும் அதே அனுசரனையாளரின் உதவியுடன் வழங்கப்பட்டன.
57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஆர்.ஆர்.பி ஜயவர்தன வழங்கிய வழிகாட்டுதல்களில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
573 வது பிரிகேட் தளபதி கேணல் எஸ்பீஆர் பிரசன்ன , 9 வது விஜயபாகு படையணி கட்டளை அதிகாரி மற்றும் படையினர் இவ் திட்டத்தில் பங்கேற்றனர்.