Header

Sri Lanka Army

Defender of the Nation

07th January 2022 18:37:08 Hours

பார்வைக் குறைபாடுள்ள இரண்டு போர் வீரர்களுக்கு அதிநவீன வாசிப்பு உபகரணங்கள் (OrCam Read devices) பரிசளிப்பு

பார்வையற்ற மாற்றுத்திறனாளி போர்வீரர்களுக்கு சிறந்த மேம்பட்ட தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் நோக்கத்துடன் இராணுவத்தின் புனர்வாழ்வு பணிப்பாளர், மே 2009 க்கு முன்னர் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது தீவிரவாத தாக்குதல்களால் பார்வை இழந்த இரண்டு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு அதிநவீன வாசிப்பு உபகரணங்கள் (OrCam Read devices) சாதனங்கள் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஆசிர்வாதத்துடன், வரையறுக்கப்பட்ட ஓரல் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டொக்டர் உபேந்திர பீரிஸ், இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட அந்த இரண்டு அதிநவீன கையடக்க சாதனங்களையும் பரிசாக வழங்கினார். இதன் பெறுமதி ரூ.1.4 மில்லியனாகும்.

தன்னியக்க அதிநவீன வாசிப்பு சாதனமானது, மூக்கு கண்ணாடியில் பொருத்தப்பட்டிருக்கும் போது, எந்தவொரு ஆங்கில மொழி ஆவணத்தின் ஒலிமூலமான விளக்கத்தையும் பயன் பெற உதவுகிறது. இதன்படி, மனிதாபிமான நடவடிக்கையின் உச்சக்கட்டத்தின் போது காயங்களுக்கு உள்ளாகி பார்வை இழந்த பிரிகேடியர் சிசிர தர்மசேன மற்றும் லெப்டினன் கேணல் துஷ்யந்த யாப்பா ஆகியோருக்கு இவ்விரு சாதனங்களும் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் துஷான் சேனாரத்ன மற்றும் வரையறுக்கப்பட்ட ஓரல் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டொக்டர் உபேந்திர பீரிஸ் ஆகியோர் தலைமையில் புனர்வாழ்வு பணிப்பகத்தின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வின் போது தற்பொழுதும் இராணுவத்தில் சேவையாற்றும் அந்த இரண்டு பேருக்கும் இரண்டு சாதனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.