06th January 2022 05:54:09 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக முல்லைத்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லம் மற்றும் லதானி சிறுவர் இல்லத்தில் உள்ள 115 க்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை (2) திகதி அன்பளிப்பு செய்யப்பட்டன.
59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சி.டி.சூரிய பண்டாரவின் ஒருங்கிணைப்பின் ஊடாக, அரச சார்பற்ற நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அனுசரணையின் மூலம் இந்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் 592 வது பிரிகேட்டின் 23 வது இலங்கை சிங்க படையணியின் பிரதேசத்தில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தில் உள்ள 101 பெண்கள் மற்றும் 15 பணியாளர்களுக்கும் மற்றும் 24 வது இலங்கை சிங்க படையணியின் பிரதேசத்தில் அமைந்துள்ள லதானி அனாதை இல்லத்திலுள்ள 15 பெண்கள் மற்றும் 5 பணியாளர்கள் ஆகியோர்களுக்கான மின்சார உபகரணங்கள், அணிகலன்கள், உடைகள், உலர் உணவுப் பொதிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சி.டி.சூரிய பண்டார, 591 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ பெரேரா, 592 வது பிரிகேட் தளபதி சமிந்த ஆராச்சிகே ஆகியோருடன் லவ்ட் சேரிட்டி தொண்டு நிறுவனத்தின் முகாமையாளர் திரு பசிந்து மற்றும் இத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர் சார்ஜென்ட் ஜே.பி.லியனகே ஆகியோர்கள் பாரதி சிறுவர் இல்லத்தில் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
592 வது பிரிகேட்டின் 23 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் என்.எ.அயி.பி.கே கமகே அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட சகல சிறார்கள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு பண்டங்கள் மற்றும் சிற்றுண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.