Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2021 21:00:39 Hours

வள்ளிபுனம் பகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலன்புரி உதவிகள்

கஸ்ட பிரதேச மாணவர்களின் கல்விப் பின்னணியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட “குழந்தைகளின் நம்பிக்கை” அமைப்பு, பிள்ளைகள் மற்றும் பொதுமக்களின் நலனை மேம்படுத்துவதற்காக முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு தனது அனுசரணையை வழங்கியுள்ளது. வள்ளிபுனத்தில் வியாழக்கிழமை (30) வறிய குடும்பங்களுக்கான பாடசாலை உபகரணங்கள், உடைகள், காலணிகள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கு அமைவாக முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்திபண்டார மற்றும் 681 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நளின் ஹெட்டியாராச்சி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் மற்றும் இராணுவத்தினர் இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் வல்லிபுனம் பாடசாலை வளாகத்தில் இந்நலத்திட்டம் நடைபெற்றது.

பாடசாலை அணிகலன்கள், உடைகள், காலணிகள் மற்றும் புத்தகங்கள் என்பன மாணவர்களின் நலனுக்காக விநியோகிக்கப்பட்டதுடன் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.பின்னர், அன்றைய நிகழ்ச்சி நிரலின் மேலும் ஒரு அம்சமாக அந்த பயனாளிகளுக்கு சிறப்பு மதிய உணவு உபசரிப்பும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வானது 681 வது பிரிகேடின் 6 வது கெமுனு ஹேவா மற்றும் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் கட்டளை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி ஏற்பாடு செய்யப்பட்டது. அருட்தந்தை மேதகு ஜீவர்கீஸ் மகரியோஸ், மதகுருமார்கள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு. எஸ்.ஜெயகாந்த், வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். தமிழ் மாறன், பாடசாலை அதிபர் திரு.சிவகுரு சின்னராசா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்திபண்டார.

நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள், 681வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நளின் ஹெட்டியாராச்சி, 682வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கலப்பதி, 62 வது படைப் பிரிவின் அதிகாரிகள் , அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் வள்ளிபுனம் பாடசாலை அதிபர் அன்றைய நலத்திட்டங்களில் கலந்துகொண்டனர்