03rd January 2022 17:02:32 Hours
முல்லேரிய தொற்று நோய் வைத்தியசாலையில் கொவிட் 19 வைரஸ் தொற்று குணமடைந்து சிகிச்சை பெற்று வந்த வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 563 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பண்டுக பெரேரா வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிக்கிரியைகள் எல்தெனிய மயான பூமியில் இன்று பிற்பகல் (3) அவரது நெருங்கிய இராணுவ சகாக்கள், குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடல் மத்தியில் இராணுவ மரியாதையுடன் இடம் பெற்றன.
கடவத்தை பிரிகேடியர் பண்டுக பெரேராவின் இல்லத்தில் இருந்து இராணுவ அணிவகுப்பு புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, சிரேஷ்ட காலாட்படை வீலலின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிரிகேடியர் பண்டுக பெரேராவின் அகால மரணம் குறித்து ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த இராணுவத் தளபதி அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கான அனைத்து உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
அதே நேரத்தில், ஜெனரல் ஷவேந்திர சில்வா, மறைந்த சிரேஷ்ட அதிகாரியின் துணைவியார் திருமதி பாண்டுக பெரேரா மற்றும் அவரது குழந்தைகளுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மேலும் அவரது எதிர்பாராத மரணத்திற்கு அனுதாபகங்களை தெரிவித்தார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் அதே இடத்தில் துக்கத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு மரியாதை செலுத்தினார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஓய்வு பெறுவதற்கு முன்னர் உயிரிழந்த சிரேஷ்ட அதிகாரியின் படையணியான இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.