31st December 2021 20:30:39 Hours
அரச கொள்கைக்கு அமைய சேதன பசளை மற்றும் திரவ பசளை உற்பத்தி தொடர்பான முழு நாள் பயிற்சி பட்டறை செவ்வாய்க்கிழமை (28) ஒட்டுசுட்டானில் உள்ள விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் 59 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டி.சூரியபண்டார அவர்களின் முன் முயற்ச்சியில் முப்படையினர் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக உதவிப் பணிப்பாளர் திரு.கே.கே.சி.விமல் குமார, கிழக்கு மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ் யாமனி, முல்லைத்தீவு விவசாய ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.திஜாந்தன், விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலைய பண்ணை முகாமையாளர் திரு. ஜே. கீர்த்திகன் ,பிரிகேட் மற்றும் பட்டாலியன்களின் படையினர் உள்ளி்ட்ட பலர் கலந்துகொண்டனர்.
அனைத்து பங்கேற்பாளர்களும் சேதன பசளை உற்பத்தி செயல்முறை தொடர்பான அறிவைப் பெற்றனர் மற்றும் இத் திட்டத்திற்கான பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களின் சேகரிப்பு தொடர்பான நடைமுறை அம்சங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.