Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2021 12:04:04 Hours

இராணுவ வழங்கல் கட்டளைகள் அதன் ஆண்டு நிறைவைக் முன்னிட்டு இழுப்பை மரக்கன்றுகள் விநியோகம்

கொஸ்கம, சாலாவ இராணுவ வழங்கல் கட்டளைத் தலைமையகம் தனது 42 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதன்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வின் போது இழுப்பை மரக்கன்றுகளை நட்டியதுடன் விநியோகமும் செய்தது.

வழங்கல் கட்டளைகள் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அவர்கள் தலைமையில் சாலாவ வைத்தியசாலை வளாகத்தில் பிரதம வைத்திய அதிகாரி, தாதியர்கள் மற்றும் வைத்திய ஊழியர்களின் பங்களிப்புடன் 100 மரக்கன்றுகளை நாட்டியும் வைக்கப்பட்டதுடன் 200 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு பஹல கொஸ்கம மேற்கில் உள்ள கமநல உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் பிரதேச பொதுமக்களும் ஆதரவு வழங்கினர்.

இந்த ஏற்பாட்டின் போது வழங்கல் கட்டளைகள் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், , சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.